சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.. முதல்வருக்கு கோரிக்கை.!
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.
நேற்று முதல் 100 சதவீத ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் சார்பில் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். அதில், 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி முறையில் வேலை செய்தபோது அனைத்து சனிக்கிழமையும் வேலைநாளாக அறிவித்தது.
அன்றைய சூழ்நிலையில் அது தேவைப்பட்டது. தற்போது, 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.