சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்! குழந்தைக்கு இரண்டாம் கட்ட சோதனை நிறைவு!
சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண்ணிற்கு தவறுதலாக எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு நேற்று நிவாரண தொகையாக 25 லட்சமம், ஒரு வீடு, அரசு வேலை என நிவாரண தொகையினை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு எச்ஐவி தொற்று இருக்கிறதா என இன்று இரண்டாம் கட்ட சோதனை நடைபெற்றது. அதில் குழந்தைக்கு எச்ஐவி தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.