சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு..!
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் நேற்றுஏற்கனவே 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, மஞ்சள் ஓடைப்பட்டியை சேர்ந்த முனியசாமி என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த 2 பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.