சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் கைது..!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து விவகாரத்தில் உரிமையாளர் பூமாரி கைது.
சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் கடந்த 5-ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பூமாரியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரனை காவல்துறை தேடி வருகிறது.