சாட்டை துரைமுருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மணல் அள்ளப்படுவதாக அவதூறு பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது குற்றச்சாட்டப்பட்டது. இதைதொடர்ந்து, சாட்டை துரைமுருகன் மீது சைபர் க்ரைம் காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர், கரூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி கே.கே நகரில் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்து வரும் வினோத் என்பவரை மிரட்டிய வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.