மிரட்டல் வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..!
கார் உதிரி பாகங்கள் விற்பனையாளரை மிரட்டிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி கேகே நகரில் வினோத் என்பவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில், விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி இழிவாகப் பேசி சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார்.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் யூடியூபர் சாட்டை முருகன் உள்ளிட்ட 4 பேர் நேரடியாகச் சென்று விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி இழிவாக பேசக்கூடாது எனக் கூறி வினோத்தை மிரட்டி மன்னிப்பு கேட்க செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, வினோத் தான் மிரட்டப்பட்டது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர், சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கார் உதிரி பாகங்கள் விற்பனையாளர் கடைக்காரர் வினோத்தை மிரட்டிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர், தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள வழக்குகளில் நீதிமன்ற காவல் இருப்பதால் துரைமுருகன் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.