நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே தமிழுக்கு அரண்" என்ற கருத்தரங்களில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார்.

sathyaraj - Ajith kumar

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற கருத்தரங்களில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார்.

இன்று மாலை 6.30 மணி அளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், “நான் 15 வயது இருக்கும் போது முத்தமிழறிஞர் கலைஞரின் பராசக்தி திரைப்பட வனங்கள் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. கலைஞர் மீது காதல் வந்துவிட்டது.

“ஈழ விடுதலைக்கு பெரிய உத்வேகம் கொடுத்தது திராவிட இயக்கங்கள் தான். தமிழ் தேசியம் ஆரியதைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர, திராவிடத்தை அல்ல” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “சம்பந்தமே இல்லாம ஒருவர் மேல் கோவம் வர மதம் தான் காரணம்” என நடிகர் அஜித்குமாரின் பேச்சுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சமீபத்தில், மதமும், சாதியும் இதற்கு முன்னர் நீங்கள் சந்திக்காத மனிதர்களைக் கூட வெறுக்க வைக்கும் என நடிகர் அஜித்குமார் பேசிய வீடியோ கவனம் பெற்றது. தனது ‘வீனஸ் டூர்ஸ்’ ப்ரோமோ வீடியோவில் பேசிய அவர், இந்த உலகம் பல்வேறு கலாச்சாரங்களால் நிறைந்தது எனவும், பயணம் மேற்கொண்டால் மட்டுமே அவற்றை உணர முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும், பயணம் ஒருவரை நல்ல மனிதனாக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்