ஆகஸ்ட் 1-ஆம் தேதி அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை..! அதிமுக சார்பில் யாருக்கு அழைப்பு..?
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இதனையடுத்து, இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ள நிலையில், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை கலந்து ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.