சாத்தாக்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தனர். ஆனால், உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு பெண் காவலர்கள் ரகுகணேஷ்-க்கு எதிராக சாட்சியங்கள் அளித்துள்ளதால் அவர்கள் இன்னும் நீதிமன்றத்தால் குறுக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்படாத சூழ்நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது பெனிக்ஸ் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையை ஏற்று குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…