தந்தை மற்றும் மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
எஸ்.எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோர் இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்டனர்.முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.இதனை தொடர்ந்து செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதன் பின் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.மேலும் அவரை விசாரணை செய்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…