சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் 8 பேர் கொண்ட குழுவினர், தூத்துக்குடி புறப்பட்டனர். மதுரையில் இருந்து தூத்துக்குடியில் மூன்று கார்கள் மூலம் நேற்று இரவு தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வந்தடைந்தனர்.
அவர்களிடம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்ளிட்டவையை விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை அதிகாரி அனில்குமார் ஒப்படைத்தார்.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…
வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…