தந்தை, மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்குப்பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்து உள்ளனர்.
இதனால், பென்னிக்ஸ், ஜெயராஜ் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் உட்பட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தந்தை, மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தியதாகவும், இருவரும் உயிரிழந்த நிலையில் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை மகன் மீது பொய் வழக்கை பதிவு செய்ததாகவும் சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…