தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் , அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சியினர், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழந்த விவகாரத்தோடு தொடர்புப்படுத்தி வேறு வீடியோக்களை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ சாத்தான்குளத்தில் நடந்தது அல்ல, கடந்த 2019-ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் அருகே நடந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தொடர்புபடுத்தி தவறான தகவல் பரவுகிறது.
இந்த வீடியோவை பரப்பியவரை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…