சாத்தான்குளம் வழக்கு: சிசிடிவியை ஆப்பரேட் செய்த காவலர் ஆஜர்.. மாஜிஸ்திரேட் விசாரணை!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்சிஸிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்ஸை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆஜராக உத்தரவிட்டார்.
இதனையடுத்து திருச்செந்தூரில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் தாமஸ் பிரான்ஸ் ஆஜரானதை தொடர்ந்து, அவரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணையை நடத்தி வருகிறார்.