சாத்தான்குளம் கொலை வழக்கு.! சிபிஐ விசாரணை வட்டத்திற்குள் சிக்கும் மேலும் 5 காவலர்கள்.!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் அடுத்ததாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜும், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, முதலில் 5 போலீசார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு, மேலும் 5 போலீசார் இந்த இரட்டை கொலை வழக்கில் விசாரணை வட்டத்திற்குள் சிக்கினர்.
இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள், முதலில் கைது செய்யப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் உட்பட 5 பேரிடம் 3 நாட்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை சேகரித்தனர்.
இந்நிலையில், அடுத்ததாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர். இந்த 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள், ஏற்கனவே, வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசாரிடம் கலந்தாலோசித்து வழக்கு பற்றிய விவரங்களை மேலும், சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025