சாத்தான்குளம் வழக்கு.! சிறையில் இருக்கும் முன்னாள் காவலருக்கு ஜாமீன்.!

Madurai High Court - Sathankulam Case

Sathankulam Case – தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2020 ஜூன் மாதம் கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் தங்களது செல்போன் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையில் தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

Read More – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

போலீஸ் விசாரணையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் வெயிலுமுத்து உள்ளிட்ட 9 காவலர்கள் சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தற்போது வரை அவர்கள் சிறையில் உள்ளனர்.

READ MORE – இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்

இவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் இன்னும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. மதுரை சிறையில் இருக்கும் தலைமை காவலர் வெயிலுமுத்து தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

Read More – ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதில், தனது மகளுக்கு வருகிற மார்ச் மாதம் 7ஆம் தேதி பூப்புனித நீராட்டு விழா என்றும் தான் மூன்று வருடங்களாக சிறையில் இருக்கிறேன் தன்மீது எந்த விதமான குற்ற வழக்குகளும் இல்லை என்றும் கூறி இடைக்கால ஜாமீன் வழங்க கோரி இருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டபாணி முன்னாள் காவலர் வெயிலுமுத்துவுக்கு மூன்று நாள் காவலர் பாதுகாப்புடன் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்