சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.! கோவில்பட்டி சிறை கைதி சாட்சியம்.!
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சக கைதியாக இருந்த ராஜா சிங் சாட்சியம் அளித்துள்ளார்.
சாத்தான் குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையில், விடுபட்ட பிரிவுகளான கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சிபிஐ கோரியிருந்தது. இதற்கு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் சக கைதியாக இருந்த ராஜா சிங் சாட்சியம் அளித்துள்ளார். அவர் தற்போது கோவில் பட்டி சிறையில் இருக்கிறார்.