சாத்தான்குளம் வழக்கு – 3 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை தாமதமாகிறது என்று சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ தகவல்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாத அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதத்தில் சாத்தான்குளம் கொலை வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை தாமதமாகிறது என்றும் மேலும் 8 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருப்பதால் 2-3 மாத அவகாசம் தேவைப்படுகிறது எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதால் அப்பணியிடம் காலியாக உள்ளது. நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டதால் வழக்கு விசாரணை தாமதமானது எனவும் சிபிஐ தரப்பில் கூறியுள்ளனர்.
மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக்கோரி ஜெயராஜின் மனைவி தொடர்ந்து வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 முறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 5 மாத அவகாசம் கேட்டு சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.