#BREAKING: சசிகலா வருகை…சென்னையில் பேரணி நடத்த அனுமதி மனு..!
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனால், சசிகலா கொரோனா சிகிக்சை பெற்று வந்தநிலையில், கடந்த 31-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டிற்கு சசிகலா தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
நாளை மறுநாள் காலை சசிகலா தமிழகம் வரவுள்ளதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். இந்நிலையில், சசிகலா நாளை மறுதினம் தமிழகம் வர உள்ள நிலையில், சசிகலாவை வரவேற்று சென்னை போரூர் முதல் அம்மா நினைவிடம் வரை பேரணி நடத்த அனுமதி கோரி முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.
இந்த பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.