’’தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு” – ராமதாஸ் மறைமுக விமர்சனம்.! ..!

பெங்களூரில் இருந்து நேற்று காலை சென்னைக்கு புறப்பட்ட சசிகலா ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர் வழியாக சென்னை வந்தார். வரும் வழியில் சசிகலாவின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தேவனஹள்ளியிலிருந்து சென்னை இடையிலான சுமார் 380 கி.மீ. தூரத்தை அவர் கடக்க 20 மணி நேரத்திற்கும் மேலானது.
பெங்களூரில் தொடங்கிய பயணம் 20 மணி நேரம் தொடர்ந்த நிலையில் கார்கள் மாறி மாறி சசிக்கலா சென்னை வந்தடைந்தார். பெங்களூருவில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்ட சசிகலா இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் ராமாபுரம் தோட்டத்திற்கு வந்தடைந்தார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
’’தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு” என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது
— Dr S RAMADOSS (@drramadoss) February 9, 2021
அதில், ’’தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு” என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறுவது எந்நாளோ? என பதிவிட்டுள்ளார். இதனால், சசிக்கலாவின் வருகை குறித்துதான் ராமதாஸ் பதிவிட்டதாக பலர் குறி அவரது ட்வீட்டில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறுவது எந்நாளோ?
— Dr S RAMADOSS (@drramadoss) February 9, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024