சசிகலா அவர் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வோம்.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து திரும்பிய சசிகலாவின் வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றத்தை அளிக்கும் வண்ணம், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் சசிகலா அரசியலை விட்டு விலகி விட்டார் என்றும், அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவிலேயே எங்களை ஒதுக்கி விட்டார்கள். இதற்கு நிர்பந்தம் காரணம் என நான் சொல்ல மாட்டேன். இந்த முடிவு சசிகலாவின் சொந்த முடிவு. சசிகாலா அதிமுக-வின் பொது செயலாளர் தான். ஆனால், அவர் அதிமுகவை மீட்க போகிறார் என்று நானும் சொல்லவில்லை. சசிகலாவும் சொல்லவில்லை. சசிகலா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்து இனிமேல்தான் ஆலோசனை நடத்த வேண்டும். சசிகலா அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், சசிகலாவின் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அவரிடம் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரைமணி நேரம் போராடினேன். ஆனால் அவரின் முடிவு எனக்கு சோர்வை அளித்தது. சசிகலா அவர் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு…
பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை…
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…