அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும்….?

Default Image

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது எனவும், இதனால் கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சினை அதிகரித்துள்ளதுடன், அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தடுப்பூசி இல்லை என்று அறிவிப்பு பலகைகளை வைக்கக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி கொலை செய்யப்பட்டிருப்பது எந்த அளவு இந்த ஆட்சியில்  பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும் என தெரிவித்துள்ள அவர், அதிமுகவில் வளர்ச்சியை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் சசிகலா ஆடியோக்களை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சசிகலாவின் சூழ்ச்சிகள் தோல்வி அடைந்து விட்டதாகவும், அவரது எண்ணம் நிறைவேறாது எனவும், அதிமுகவின் தேர்தலைப் பொருத்தவரை அதிமுகவுக்கு வெற்றிகரமான தோல்வி தான் கிடைத்துள்ளதாகவும், 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இபிஎஸ் ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்