பிளானை மாற்றி சென்னைக்கு பயணம்.. போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த சசிகலா.. !
அதிமுக உறுப்பினர் காரில் ஏறி சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி தமிழகம் வருகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் இன்று காலை பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு காரில் புறப்பட்டார். சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்ததால் சசிகலா அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என போலீஸ் தெரிவித்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தி இருந்தது.
சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்த நிலையில், தமிழக எல்லைக்கு வருவதற்கு முன் தனது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு அதிமுக உறுப்பினர் காரில் ஏறி தமிழக எல்லைக்கு சசிகலா வந்தார்.
அதிமுக கொடியுடன் சசிகலா பயணம் செய்த காரணத்தால் காரை தடுத்து நிறுத்திய கிருஷ்ணகிரி போலீசார், தடையை மீறி கொடியை பயன்படுத்தியதற்காக நோட்டீசை வழங்கியது. அந்த நோட்டீசை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பெற்றுக்கொண்டார்.
சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீசார் அதிமுக கொடியை அகற்றவில்லை. ஏனென்றால் அந்த கார் அதிமுக உறுப்பினர் கார் என்பதால் என்னசெய்வது என தெரியாமல் போலீசார் திணறினர். இதனால் சசிகலா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. அதிமுக உறுப்பினர் கார் என்பதால் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி தமிழகம் வருவதில் எந்த பிரச்சனை இல்லை என கூறப்படுகிறது.