4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு பிறகு இன்று விடுதலையாகிறார் சசிகலா

இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.பின்பு அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று அண்மையில் சிறை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி அபராதமும் செலுத்திவிட்டார். சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடந்த 20- ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சசிகலாவிடம் இன்று காலை 9 மணிக்கு காவல்துறையினர் ஆவணங்களில் கையொப்பம் வாங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025