#BreakingNews : மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

11 நாள் சிகிச்சைக்கு பிறகு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த 20-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025