சசிகலா சிரிக்காமல் நிறைய ஜோக் சொல்கிறார் – ஜெயக்குமார்
ஜெயலலிதாவாக என்னை பார்க்கிறார்கள் என கூறி சசிகலா சிரிக்காமல் நிறைய ஜோக் சொல்கிறார் என ஜெயக்குமார் விமர்சனம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ள காலை உணவு திட்டம் குறித்து விமர்சித்து பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், ‘அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லும் திமுக அரசு எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. சொன்ன வாக்குறுதிகளை எதையுமே நிறைவேற்றுவதில் அரசு அக்கறை செலுத்தவில்லை. காலை சிற்றுண்டி திட்டம்-பெயர் சூட்டுவதில் மட்டுமே பிரம்மாண்டம் காட்டும் திமுக அரசு என தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலா குறித்து அவர் கூறுகையில், ஓ.பி.எஸ்-பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது ஜெயலலிதாவாக என்னை பார்க்கிறார்கள் என கூறி சசிகலா சிரிக்காமல் நிறைய ஜோக் சொல்கிறார் என விமர்சித்துள்ளார்.