அதிமுக நலனுக்காக ஒருதாய் வயிற்றுபிள்ளையாக ஒன்றிணைய வேண்டும்.! சசிகலா கருத்து.!
கழகத்தின் நலனுக்காக நம் இயக்கத்தின் ஓர் தாய் வயிற்றுப் பிள்ளையாக அனைவரும் ஒன்றிணைவோம். என சுற்றுப்பயணத்தில் சசிகலா பேசினார்.
திருமதி சசிகலா தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். அப்போது திமுக ஆட்சியை பற்றியும், அதிமுகவின் அடுத்த எதிர்காலம் குறித்தும் பல்வேறு கருத்துகளை பிரச்சாரம் மூலம் முன்வைத்து வருகிறார்.
அதில் குறிப்பாக,’ திமுகவினர் நம் இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை எந்த யாரும் நம் இயக்கத்தை அழித்து விட முடியாது. கொங்கு மக்களையும் அசைத்து விட முடியாது.
எத்தனையோ கழகத் தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து கழகத்தை காப்பாற்றி இருக்கிறார்கள். வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கழகத்தை நடத்தி செல்வதில் உறுதியாக உள்ளேன். நம் இயக்கத்தின் ஓர் தாய் வயிற்றுப் பிள்ளையாக அனைவரும் ஒன்றிணைவோம். நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் சிறப்பான வெற்றியை பெற்று அம்மாவின் எண்ணத்தை காப்பாற்றுவோம்.
அம்மா கொண்டு வந்து திட்டங்களை பட்டியலிட வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது. என்ன திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார். அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலே தமிழகம் தன்னிறைவு பெற்று இருக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை, காலனி என ஏராளமான பொருட்களை வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா. அம்மா மருந்தகம், ஏழை எளியவருக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டம். அன்னதானம் உள்ளிட்ட உயரிய திட்டங்களை அம்மா கொண்டு வந்தார்.’ என சுற்று பயணத்தில் சசிகலா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.