ஓபிஎஸ் உடனான சந்திப்பு குறித்த கேள்வி.? சசிகலாவின் பதில் இதுதான்.!
நான் ஓபிஎஸ்-ஐ சந்திக்க உள்ளது பற்றி அவர் தான் கூற வேண்டும். என சசிகலா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருக்கும் தனது ஆதரவாளர்களை இன்று சசிகலா சென்னையில் உள்ள தனது வீட்டில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, செய்தியாளர்கள், ஓபிஎஸ்-ஐ எப்போது சந்திக்க உள்ளீர்கள் என்று கேட்டதற்கு, ‘ அதனை பற்றி அவர் தான் கூற வேண்டும். அதிமுகவில் பிரிந்தவர்கள் இரு அணி எல்லாம் ஒன்று தான். யாரையும் பிரித்து பார்க்க நினைக்கவில்லை. ‘ என தெரிவித்தார்.
மேலும், ‘ அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டும் என்பதே தொண்டர்கள் கருத்தாக இருக்கிறது. ‘ என செய்தியார்களிடம் பேசியுள்ளார் சசிகலா.