மத்திய அரசிடம் மாநில அரசு அனைத்தையும் கேட்டு பெற உரிமை உள்ளது.! சசிகலா பேட்டி.!
மத்திய அரசிடம் கேட்டு பெற மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்டு பெற தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். – வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் கூறினார்.
வி.கே.சசிகலா தற்போது செய்தியாளர்களை சந்தித்து, தற்போதைய தமிழக அரசியல் சூழல் பற்றிய தனது கருத்துக்களை பதிவிட்டார். அப்போது அவர்பேசுகையில், ‘ தேர்தல் நேரத்தில் மத்திய அரசை விமர்சிப்பது வேறு. அதன் பின்னர் நடக்கும் அரசாங்கம் வேறு. ‘ என கூறினார்.
மேலும், ‘ மத்திய அரசுக்கு அனைத்து மாநில அரசுகளும் வரி கட்டுகிறது. ஆதலால், மாநில அரசுக்கு, தங்களது மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் கேட்டு பெற உரிமை உள்ளது. அதனை மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்டு பெற தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
எந்த நேரமும் சண்டையிட்டுகொண்டு இருக்க கூடாது. ‘ என பேசினார். அடுத்து, ‘ தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து கேட்டபோது , சசிகலா பேசுகையில், ‘ இதுவே அம்மா அரசாங்கம் இருந்தால் இதுபோல நடக்க விட்டுவைப்பார்களா.?’ என பேசியிருந்தார்.
மேலும், ‘ காவல்துறையில் நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களை அரசு சரியாக கண்டறிந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.’ எனவும் சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.