ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல சசிகலா விட்டுத்தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுசூதனின் உடல்நிலை கேட்டறிந்தார். அதே நேரத்தில் சசிகலாவும் மதுசூதனன் உடல்நிலை விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது, சசிகலா வருகையை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக வெளியேறினார். மருத்துவமனைக்கு சசிகலா வந்த காரில் முன் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தபோது, அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா அதிமுக தனது குடும்பம் என்பது நகைப்புக்குரியது. அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது. அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை.
பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுக்கொடுக்க வேண்டும். சசிகலா தடையாக இருக்கக் கூடாது. ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல சசிகலா விட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார். மேலும், திமுக தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 லட்சம் கோடி தேவை அதை எப்படிதிரட்டப் போகிறார்கள்.
திமுகவின் முதுகில் காங்கிரஸ் சவாரி செய்வது போல பாஜகவை நாங்கள் பயன்படுத்தவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து கர்நாடக சிறையிலிருந்து தமிழகம் வரும்போது சசிகலா வந்த காரில் அதிமுக கொடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…