பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர், தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் இன மக்களின் வாழ்வு வளம் பெறும் வகையில் எண்ணற்ற நலத் திட்டங்களை கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த சமுதாயத்தினரை, பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கவேண்டும் என நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளதற்கு நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் முழு முதற் காரணம் என்ற உண்மையை மறைத்து, திமுகவினர் தங்களது சாதனையாக மார்தட்டி கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.
எனவே, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான கழக அரசு தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக, தற்போது நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நமது கோரிக்கைகள் தற்போது நிறைவேறியிருப்பதற்கு தமிழக மக்களின் சார்பாகவும், அனைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், மத்திய அரசுக்கும், மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…