ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு !உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல்

Published by
Venu

ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் போட்டிபோட்டது.

இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Image result for இரட்டை இலை

இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது.அதாவது இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது சரியே என தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.அதேபோல்  தினகரன் – சசிகலா தரப்பு மனு தள்ளுபடி செய்தது.

பின்  இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

.

அதன்படி  உச்சநீதிமன்றத்தில் தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.அதேபோல் தினகரனின் கோரிக்கை நிராகரித்தது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு தினகரன் – சசிகலா தரப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும்  இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தேர்தலில் போட்டியிட தினகரனின் அமமுகவிற்கு குக்கர் சின்னம் வழங்கப்படவில்லை.அந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் அமமுக கட்சி அங்கிகரிக்கப்படாத கட்சி ,எனவே  வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று தெரிவித்தது. மாறாக பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் பரிசு பெட்டி சின்னம் வழங்கப்பட்டது.அதன்படி தேர்தலிலும் போட்டியிட்டது அமமுக.

அதேபோல் மேலும்  அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருக்கிறார் என்ற காரணத்தால் அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்றார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்தார்  தினகரன்.

இந்நிலையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Recent Posts

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

6 minutes ago

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…

45 minutes ago

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

1 hour ago

தமிழகத்தில் செவ்வாய்கிழமை (07/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…

1 hour ago

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…

2 hours ago

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று – ஐசிஎம்ஆர் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…

2 hours ago