சசிகலா சுய நினைவுடன் இருக்கிறார் – மருத்துவமனை அறிக்கை.!

பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 98-ஆக இருந்த ஆக்சிஜன் அளவு 95-ஆக குறைந்து இருப்பதாக கூறப்பட்டது.
மேலும், சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் இருப்பதால், தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சசிகலா உடல்நிலையில் சீராக நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும் சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் அளவு காலையில் இருந்ததைவிட தற்போது 98-ஆக அதிகரித்துள்ளது என அறிக்கையில் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025