சசிகலா அரசியலை விட்டு விலகுவது தான் சரி என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா 2017-ஆம் ஆண்டு சிறைக்கு சென்றபோது, பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
இந்த நிலையில், இதை எதிர்த்து சசிகலா தொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுக்களை ஏற்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறது. சசிகலாவுக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவினர் ஒற்றுமையாக உள்ளனர். எனவே சசிகலா அரசியலை விட்டு விலகுவது தான் சரி என தெரிவித்துள்ளார்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…