இன்று தமிழக வரும் சசிகலாவை வரவேற்க அவரது தொண்டர்கள் மிகவும் ஆவலுடன் உள்ள நிலையில், பல இடங்களில் இவருக்கு பேனர்கள் அடிக்கப்பட்டு, இவரை வரவேற்க தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா அவர்கள் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், இன்று சென்னை திரும்புகிறார். இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி வெளியே வந்தார். இது அதிமுகவினர் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று தமிழக வரும் சசிகலாவை வரவேற்க அவரது தொண்டர்கள் மிகவும் ஆவலுடன் உள்ள நிலையில், பல இடங்களில் இவருக்கு பேனர்கள் அடிக்கப்பட்டு, இவரை வரவேற்க தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சசிகலாவின் வருகை அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சசிகலா பேரணியாக செல்ல உள்ள இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…