தென்காசி; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியை அப்போது வழிநடத்தியவர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக இருந்த சசிகலா. அவர் தலைமையில் தான் ஓ.பன்னீர்செல்வம் முதலைவரானார். பின்னர், ஓபிஎஸ் தர்ம யுத்தத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார். அந்த சமயம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை சென்றார் சசிகலா.
சிறையில் இருந்து 4 ஆண்டுகள் கழித்து 2021இல் வெளியில் வந்த சசிகலா, அதிமுக கட்சி நலனை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். ஆனால் அதன் பிறகு 2021 தேர்தலில் அதிமுக தோல்வியை அடுத்து 2022இல் திருவள்ளூரில் மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் சசிகலா.
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது, சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது என அடுத்த திருப்பங்கள் அதிமுகவில் நிகழ்ந்தது.
நடந்து முடிந்த 2024 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. மேலும் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்து அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளகியது. இந்த தேர்தல் முடிவுகளை அடுத்து தனது அரசியல் ரீ என்ட்ரியை சசிகலா மீண்டும் அறிவித்தார். மேலும் அம்மா வழியில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.
அதன்படி, இன்று முதல் 4 நாட்கள் தென்காசிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் சசிகலா. அதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். இன்று முதல் தென்காசியில், பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் அதிமுக தொண்டர்களை நேரில் சந்தித்து ஒருங்கிணைக்க சசிகலா முடிவு செய்துள்ளார். அதற்கடுத்த பயணம் பற்றிய விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…