சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த அதிகாரமும் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் சசிகலா தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த சில நாட்களாக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாசிங் மிசின் தருவதாக கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங்மெஷின் தருவதாக கூறப்படுவது உண்மையான தகவல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக , காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கும் என்றும், அதிமுகவில் சசிகலா தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.