மேடையில் கண்ணீர்விட்டழுத திவாகரனை பார்த்து அழுத சசிகலா..!
திவாகரனின் அண்ணா திராவிட கழகம் இணைப்பு விழாவில் மேடையில் கண்ணீர்விட்டழுத திவாகரனை பார்த்து அழுத சசிகலா.
தஞ்சையில் சசிகலா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் திவாகரனின் அண்ணா திராவிட கழகம் இணைப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய திவாகரன் ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சசிகலாவை ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி அமைச்சராக வேண்டும் என்று நினைத்தார் ஆனால் சசிகலா அதனை மறுத்தார். ஜெயலலிதாவின் விருப்பத்தை அப்போதே நிறைவேற்றி இருந்தால் தற்போது இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்காது.
ஆனால், அப்படிப்பட்ட சசிகலாவை அதிமுகவில் இருப்பவர்கள் மறந்துவிட்டனர். இவர்களெல்லாம் நன்றியை மறந்து விட்டார்கள். இதனால் சசிகலாவின் கரத்தை வலுப்படுத்துவதற்காக அண்ணா திராவிடர் கழகத்தை அதிமுகவில் இணைத்துள்ளோம். தற்போது சசிகலா சீரழிந்து போவதை தன்னால் பார்க்க இயலவில்லை என்று கூறி மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். இதனை பார்த்த சசிகலாவும் கண்ணீர் விட்டு அழுதார்.