அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சசிகலா.
தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும் தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம்மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளி திருநாளில், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசியையும் தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாக சந்தோசத்துடன் இந்த தீப ஒளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நரகாசுரன எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த நினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத்திருநாளில், சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும், அன்பும் நாடி வரஇன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்.
வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை, உரித்தாக்கிக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…