#BREAKING: சசிகலாவை தவறாக பேசுவதை பொறுக்க முடியாது -அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு ..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் குறித்தும், சசிகலா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்து சென்னையில் அதிமுகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல்வரும், துணை முதல்வரும் ஆர்ப்பாட்டம் நடத்த சொல்லவில்லை.
மேலும், கட்சியின் தலைவராக இருந்த சசிகலா எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போட்ட கூடியவர். சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.
சசிகலா வெளியே வந்தாலும் ஒன்றும் நடக்காது என அதிமுகவினர் பேசி வரும் நிலையில் இந்த கருத்தை கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். சசிகலா வருகின்ற 27-ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாக உள்ளார் என்பது குறிப்பிடத்த்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)