ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதே தொண்டர்கள் எனக்கு தரும் பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று வி.கே.சசிகலா வேண்டுகோள்.
ஆகஸ்ட் 18-ஆம் தேதி நாளைய தினம் வி.கே.சசிகலாவின் 67ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சசிகலா வீடியோ காட்சி மூலம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சசிகலா, என்னை வந்து நேரில் சந்திப்பதற்கு கடிதங்கள் வாயிலாகவும், அலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால், தற்போது கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருப்பதாலும், பொது முடக்கம் நீடித்து கொண்டியிருப்பதாலும், எனது அருமை தொண்டர்கள் பாதுகாப்பையும், உடல்நலத்தையும், கருத்தில் கொண்டு அவரவர் வசிக்கும் இடங்களிலேயே ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்தும், நாட்டு மக்கள் நலம் பெற வேண்டுதல் செய்வதும் நீங்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசு என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்து பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், அதனை உற்சாகமாக கொண்டாட தொண்டர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அன்றைய தினம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தி அரசியல் பயணத்தை அவர் தொடங்குவார் என்றும் கூறப்பட்டது.
ஜெயலலிதா உடன் போயஸ்கார்டனில் இருந்த வரைக்கும் பெரிய அளவில் பிறந்தநாளை சசிகலா கொண்டாடியதில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு சசிகலா சிறை சென்ற பின்னர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ட்விட்டரில் #HBDChinnama என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாளை கொண்டாடினர்.
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…