சசிகலா – ஓபிஎஸ் திடீர் சந்திப்பு
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு, நினைவு இடத்திற்கும் சென்று அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், திமுக சார்பி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது.
இந்த பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சென்ற திமுக பேரணி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
எல்லாரையும் எங்களுடைய அதிமுகவைச் சேர்ந்தவர்கள்- சசிகலா..!
இதன்பின், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதுபோன்று அரசியல் தலைவர்கள் பலரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக, அண்ணாவின் நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சசிகலா சென்று மரியாதை செலுத்தினார்.
அந்த சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர். இதன்பின், சசிகலா செய்தியாளர் சந்திப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, நான் அனைவரையும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான் என்று ஆரம்பத்தில் இருந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.