திமுகவின் B-டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர் – அமைச்சர் ஜெயக்குமார்.!

திமுகவின் B-டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அம்மா மினி க்ளினி தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர், முதல்வர் பழனிசாமியின் அம்மா மினி க்ளினிக் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் 12 அம்மா மினி க்ளினிக் திறக்கப்படவுள்ளது. மக்களுக்காக அயராத உழைத்து வரும் அரசு அதிமுக தான். விருதுகளை அள்ளிக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சசிகலா வருகையால் அதிமுகவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாக பேசப்படுகிறது என்று  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்றைக்கு பார்த்தேன் டிடிவி தினகரன் கூட போட்டுருக்கார் பதற்றத்தில் அமைச்சர்கள் என்று, எங்களுக்கு தெரிந்து டிடிவி தான் இப்போது பதற்றத்தில் உள்ளார். ஏனென்றால், சசிகலா வெளியே வந்ததால், கணக்கு வழக்குகளை கேட்பார். சசிகலாவின் பணத்தை எல்லாம் டிடிவி தினகரன்  கொள்ளையடித்துவிட்டார். அந்த பதற்றத்தில் தான் தற்போது இருக்கிறார்.

இதன் காரணமாகத்தான் அதிமுகவை பார்த்து பதற்றத்தில் உள்ளார்கள் என கூறுகிறார். 100 சதவீதம் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளோம். ஆகையால், நாங்கள் தெளிவாக இருக்கும்போது, எதற்கு எங்களுக்கு பதற்றம் வரப்போகிறது. அதற்கு அவசியமே இல்லை. அதிமுகவை பொறுத்தவரை ஒரே நிலைதான். சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு தொண்டன் என்ற அடிப்படையிலும், கட்சியின் அடிப்படையிலும் தான் புகார் அளித்தோம். பதவி அதிகாரத்தில் கொடுக்கவில்லை. எங்களுக்கு பதவி இரண்டாவது தான். கட்சியை காப்பாத்துவதற்கு பதவியை கூட தூக்கி எறிந்துவிட்டு, கட்சியா, ஆட்சியா என நினைத்தால், முதலில் எங்களுக்கு கட்சிதான் முக்கியம் என்றும் அதன்படியே புகார் அளிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். சசிகலாவும், தினகரனும் திமுகவின் B-டீமாக செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்