அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜாவின் உறவினரான ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக சரோஜாவிடம் உதவியாளராக இருந்துவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் குணசீலன் ஒன்றை அளித்தார். அதில் சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.76 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, காவல்துறை சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சரோஜா மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…