செங்கோல் திரைகதையும்,சர்கார் திரைகதையும் ஒன்று தான் என்று திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் நடிகை கீர்த்திசுரேஷ் நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளாராக ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார் அதிரடி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார் இந்த படத்தினை சன்பீக்சர்ஸ் தயாரித்து தீபாவளிக்கு வெளியிட தயார் நிலையில் உள்ளது.
படம் பற்றி எதிர்பார்ப்பு குறித்து தயாரிப்பு நிறுவனமான சன்பீக்சர்ஸ் ஃபஸ்ட் லுக்,டீசர்,இசை வெளியீட்டு விழா என்று கொழுத்தி விட்டது.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் கம்முன்னு உம்முன்னு இருந்தலே வாழ்க்க ஜாம்முனு இருக்கும் என்று மாஸாக கூறிய விஜய் மாநில ஆட்சி பற்றியும் பதிலை தெறிக்கவிட்ட விஜய் அரசியல் குறித்து அதிரடியாக பேசியதை ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பையும்,அரசியலில் அதிர்வையும் ஏற்படுத்தியது.
இந்த மாஸ் பேச்சுக்கு பிறகு தான் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.டீசர் அடித்து நொறுக்கும் வசனத்தில் அரசியல்வாதிகள் அனைவரையும் அடித்து தூக்கியது.விஜயின் ஐம் ஏ கார்ப்ரேட் கீரிமினல் வசனம் தெறிக்கவிட்டது என்றே சொல்லலாம்.இந்த டீசர் உலக அளவில் ஹோலிவூட் படத்தின் டீசர் சாதனையே முறியடித்ததுன பாத்துக்கோங்க மரண மாஸ் படத்துக்கு இப்படி போய் கொண்டிருந்த சர்கார் சங்கடத்தில் மாட்டிக்கொண்டது.
சர்கார் என்னுடைய கதை என்று வருன் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார் இதனை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஆக்.30 க்குள் பதிகளிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் இது குறித்து வருன் (எ) ராஜேந்திரன் தெரிவிக்கையில் செங்கோல் என்ற தலைப்பிலான என் கதையை சர்கார் என்று தலைப்பு வைத்து பட எடுக்கப்பட்டுள்ளது.இது முழுக்க என் கதை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இவருடைய செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்று தான் என்று திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்துள்ளது.இயக்குநரும் நடிகருமான கே.பாக்கியராஜ் தலைவராக உள்ள திரைபட எழுத்தாளர் சங்கம் வருன் ராஜேந்திரனுக்கு அனுப்பிய கடிதத்தில் தங்கள் பக்கம் உள்ள நியாத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம் என்று தெரிவித்தார் மேலும் முழுவதுமாக உதவாதநிலைமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவித்தார்.இந்த முடிவால் படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளதாக சினி வட்டாரங்கள் தகவல்களை கசிந்துவிடுகின்றன.
DINASUVADU
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…