சர்கார் பட விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு 6 வாரம் வரை தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சர்கார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் தமிழக அரசியலை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்தன. அவை மறுதணிக்கை மூலம் கட் செய்யப்பட்டு பிறகு திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றபிரிவு வழக்குகள் போடப்பட்டன.
இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற உத்தரவின் படி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவு குற்றப்பிரிவு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கோடிக்கணக்கான ரசிகர்கள் படத்தை பார்த்துள்ள நிலையில், விரோதத்தை தூண்டியதாக எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை, திரைப்படத்தை, திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேபோல் பிற்பகலில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின்னர் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்.அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான எப்.ஐ.ஆர் தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…