அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சர்கார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் தமிழக அரசியலை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்தன. அவை மறுதணிக்கை மூலம் கட் செய்யப்பட்டு பிறகு திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றபிரிவு வழக்குகள் போடப்பட்டன.
இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற உத்தரவின் படி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவு குற்றப்பிரிவு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கோடிக்கணக்கான ரசிகர்கள் படத்தை பார்த்துள்ள நிலையில், விரோதத்தை தூண்டியதாக எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை, திரைப்படத்தை, திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேபோல் பிற்பகலில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…