கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜீவஜோதி என்பவர் சரவணபவன் உணவக மேலாளரின் மகள் ஆவார்.ஜீவஜோதியின் கணவர் பெயரை பிரின்ஸ் சாந்தகுமார் ஆகும். ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் சரவணபவன் உணவகத்தில்வேலையாளாக பணியாற்றி வந்தார்.
ஆனால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் நல்ல பலன்களை அடையலாம் என்று ராஜகோபாலிடம் ஜோதிடர்கள் கூறினார்கள். ஏற்கெனவே ராஜகோபாலுக்கு 2 மனைவிகள். இருந்தாலும் ராஜகோபால் ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
எனவே ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கடத்தப்பட்டார்.இதனால் ஜீவஜோதி கணவரை காணவில்லை என்றும் ராஜகோபாலின் ஆட்கள் அவரை கடத்திவிட்டதாகவும் சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகார் தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணையை தொடங்கினார்கள்.பின்னர் சில நாட்களில் பிரின்ஸ் சாந்தகுமாரின்(ஜீவஜோதியின் கணவர்) உடல் கொடைக்கானலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ,அவரது மேலாளர் டேனியல் உட்பட 9 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.மீதமுள்ள 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதேபோல் தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராஜகோபால்.ஆனால் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றமும் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் தண்டனையை உறுதி செய்தது.
இதனால் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.பின் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அதில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.மேலும் ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு கெடு விதித்தது.
ஆனால் ராஜகோபால் தரப்பில் உடல் நிலையை காரணம் காட்டி சரணடைவதிலிருந்து விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.பின் சரணடைவதிலிருந்து விலக்குக் கோரிய ராஜகோபாலின் மனு நிராகரித்தது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…