#BREAKING: கமலுடன் சரத்குமார் சந்திப்பு..! மநீம.. சமக கூட்டணி..?

மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் கமலுடன் சரத்குமார் சந்தித்து பேசி வருகிறார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி விலகியது. பின்னர், இந்திய ஜனநாயக கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் இடையே சட்டப்பேரவை கூட்டணி உறுதியானது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் கமலுடன் சரத்குமார் சந்தித்து பேசி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலில் ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இந்த சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி குறித்து கமலுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
April 27, 2025