பங்காரு அடிகளார் ஆன்மீகத்துறையில் தனக்கென தனி அடையாளம் பதித்தவர் – சரத்குமார்

sarathkumar

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி  செலுத்தியுள்ளனர். மேலும், இவரது மறைவையொட்டி,  அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்டவரும், மரியாதைக்குரிய சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

திரளாக பெண்கள் மேல்மருவத்தூர் சென்று வழிபட காரணமாக அனைத்து நாட்களிலும் பெண்களுக்கு கோவிலில் அனுமதியளித்து, ஆன்மீக புரட்சி செய்தவர். இந்திய அளவில் ஆன்மீகத்துறையில் தனக்கென தனி அடையாளம் பதித்தவர். அவரது இழப்பு ஆன்மீகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்லூரி மற்றும் கலாச்சார அறக்கட்டளையைச் சார்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறை தொண்டில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து பிரியாவிடை கண்ட அன்னாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்